×

நியோமேக்ஸ் வங்கி கணக்கு முடக்கம்; மனு தள்ளுபடி: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: நியோமேக்ஸ் வங்கி கணக்கு முடக்கம் எதிர்த்த மனுக்களை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. மதுரை, எஸ்.எஸ். காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் நிறுவனம் செயல்பட்டது. இதன் கீழ் ஏராளமான துணை நிறுவனங்களும் இயங்கின. இவர்கள் அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி ரூ.5 ஆயிரம் கோடி வரை வசூலித்து ஏமாற்றியதாக புகார் எழுந்தது. இதையடுத்து மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நிறுவனத்தின் இயக்குநர்கள் கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், பாஜ நிர்வாகி வீரசக்தி உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

நியோமேக்ஸ் நிறுவனத்தால் வசூலிக்கப்பட்ட பணத்தில் பெரும் பகுதி, அதன் துணை நிறுவனங்களாக செயல்பட்ட பல நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது தெரியவே, 88 துணை நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இதை எதிர்த்து சிலர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.இளங்கோவன் முன் ஏற்கனவே விசாரணைக்கு வந்தன. அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ரவி, ‘‘நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட பணத்தை அதன் துணை நிறுவனங்கள் மூலம் பரிமாற்றம் செய்துள்ளனர். விசாரணை இன்னும் முடியாததால், இவர்களின் மனுவை ஏற்கக் கூடாது’’ என்றார். இதையடுத்து நீதிபதி, அரசுத் தரப்பு வாதத்தை ஏற்று மனுக்களை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளார்.

The post நியோமேக்ஸ் வங்கி கணக்கு முடக்கம்; மனு தள்ளுபடி: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Neomax Bank ,ICourt ,Madurai ,ICourt branch ,Madurai, SS ,Dinakaran ,
× RELATED தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பை முறையாக ஆய்வுசெய்ய ஐகோர்ட் கிளை ஆணை..!!