×

தேனி மாவட்டத்தில் நள்ளிரவு பெய்த பலத்த மழையால் கண்மாய், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பின

தேனி: தேனி மாவட்டத்தில் நள்ளிரவு பெய்த பலத்த மழையால் கண்மாய், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. போடி அருகே அம்மாபட்டி கிராமத்தில் 210 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கண்மாய் முழு கொள்ளளவை எட்டியது.

தேனி மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு 50மிமீ மழை பதிவாகியுள்ளது. மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நீரோடை வழியாக மீனாட்சி அம்மன் கண்மாய் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்களுக்கு நீர்வரத்து தொடங்கியது.

இதன் காரணமாக 210 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கம்மாய் தனது முழு கொள்ளளவை எட்டியது இதனால் மழைநீர் மறுகால் வாங்கி டொம்புச்சேரி, உப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு வாய்க்கால் வழியாக விவசாயத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருந்தன.

இதனால் சுமார் 5,000 ஏக்கர் நிலப்பரப்பு விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 80% கூடுதலாக பதிவாகியுள்ளது.

அக்.1 முதல் இன்று வரை குமரி மாவட்டத்தில் 77.4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. குமரி மாவட்டத்தில் இயல்பைவிட கூடுதலாக மழை பெய்துள்ளதால் மாவட்டத்தில் உள்ள | பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. நெல்லை மாவட்டத்தில் இயல்பைவிட 44% கூடுதலாக மழை பெய்துள்ளது.

கோவை மாவட்டத்தில் இயல்பைவிட 28% மழையும், ஈரோடு மாவட்டத்தில் 25% மழையும், மதுரை மாவட்டத்தில் இயல்பைவிட 24% மழையும், விருதுநகர் மாவட்டத்தில் இயல்பைவிட 27% மழையும் பெய்துள்ளது.

The post தேனி மாவட்டத்தில் நள்ளிரவு பெய்த பலத்த மழையால் கண்மாய், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பின appeared first on Dinakaran.

Tags : Kanmai ,Theni district ,Theni ,Dinakaran ,
× RELATED தனியார் துறைகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்