×

பெரியபாளையம் பகுதியில் சென்டர் மீடியனை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


ஊத்துக்கோட்டை: சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் பெரியபாளையம் அருகே தண்டலம், சூளைமேனி, பெரியபாளையம் ஆகிய கிராமங்களின் சாலையின் நடுவே சென்டர் மீடியன் உள்ளது. இந்த சென்டர் மீடியன்களில் ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை செல்லும் சரக்கு வாகனங்கள் மற்றும் வாகனங்கள் இதுபோல் ஆந்திர மாநில பஸ்கள் இரவு நேரத்தில் மோதிவிடுகிறது. இதன்காரணமாக சென்டர் மீடியன் சேதம் அடைந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. சேதம் அடைந்த சென்டர் மீடியன்களை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: பெரியபாளையம், தண்டலம், சூளைமேனி பகுதியில் உள்ள சென்டர் மீடியனில் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகி வந்தது.

இதை தடுப்பதற்காக நெடுஞ்சாலை துறையினர் சில வருடங்களுக்கு முன்பு சென்டர் மீடியன் அமைத்தும் அதற்கு முன்பாக 10க்கும் மேற்பட்ட தூண்கள் அமைத்து அதற்கு கறுப்பு – வெள்ளையில் வர்ணம் தீட்டி ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தனர். ஆனால் அதுவும் அடுத்தடுத்து நடந்த லாரி விபத்துக்களில் உடைந்துவிட்டது. இந்த பகுதி சென்டர் மீடியன் முன்பு பேரல் வைக்கப்பட்டது. இதையும் மீறி வெளிமாநில லாரிகள் புதிதாக போடப்பட்ட பேரல்களையும் உடைத்துக்கொண்டு சென்டர் மீடியன் மீது மோதியது. இந்த சென்டர் மீடியன் ஊருக்கு வெளியே தான் போடப்பட்டுள்ளது. னவே நெடுஞ்சாலை துறையினர் பெரியபாளையம், தண்டலம், சூளைமேனி பஜார் பகுதியை அகலப்படுத்தி ஊருக்கு நடுவிலும் சென்டர் மீடியன் அமைத்தால் இதுபோன்ற விபத்துக்கள் நடைபெறாது. இதுவரை இங்கு 20 க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடைபெற்றுள்ளது.இவ்வாறு கூறினர்.

The post பெரியபாளையம் பகுதியில் சென்டர் மீடியனை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Periyapalayam ,Oothukottai ,Thandalam ,Chulaimeni ,Chennai ,Tirupati ,
× RELATED ஆண் புள்ளிமான் மீட்பு