×

வாலாஜாபாத் ஒன்றியத்தில் புதிய வகுப்பறை கட்டும் இடங்கள் ஆய்வு


வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் புதிதாக கட்டப்படும் வகுப்பறை கட்டும் பணிகளுக்கான இடங்களை நேற்று மாலை மாவட்ட திட்ட அலுவலர் செல்வகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். ஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்தில் 61 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் அரசினர் துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப, அப்பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டி தரவேண்டும் என அந்தந்த ஊராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நேற்று மாலை லிங்காபுரம், அய்மஞ்சேரி, கரூர் பரந்தூர், கம்மவார்பாளையம், பெரியகரும்பூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான இடங்களை மாவட்ட திட்ட அலுவலர் செல்வகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். ன்னர் அங்கு கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான இடங்களை தேர்வு செய்தார். மேலும், அங்கு பழைய பள்ளி கட்டிடங்களை உடனடியாக அகற்றி, வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படிக்கும் மாணவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி பாடங்கள் நடத்தப்பட வேண்டும் என திட்ட அலுவலர் ராஜ்குமார் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வில் செயற்பொறியாளர் ராஜராஜன், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் காஞ்சனா, ஒன்றிய பொறியாளர் மாரிசெல்வம் உள்பட அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post வாலாஜாபாத் ஒன்றியத்தில் புதிய வகுப்பறை கட்டும் இடங்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Walajahabad Union ,Walajabad ,Panchayat administration ,Walajabad Union ,
× RELATED வாலாஜாபாத் பகுதியில் தார்ப்பாய்...