×
Saravana Stores

நெசவு தொழிலாளி கொலையா ?

வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த அய்யம்பேட்டை மேல் தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (56). பட்டுத்தறி வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெகநாதன் கடந்த 2 மாதங்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இதில் கடந்த மாதம்தான் இவருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு வீட்டில் சாப்பிட்டுவிட்டு வெளியே சென்று வருவதாக கூறிய ஜெகநாதன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இரவு முழுவதும் ஜெகநாதனை தேடி கிடைக்காத நிலையில், நேற்று வேதவதி ஆற்றங்கரை பகுதியில் உள்ள கிணற்றில் அவர் சடலமாக மிதந்துள்ளார்.

இதுகுறித்து வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெகநாதன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா அல்லது அவரை கொலை செய்துவிட்டு சடலத்தை கிணற்றில் வீசிச் சென்றனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post நெசவு தொழிலாளி கொலையா ? appeared first on Dinakaran.

Tags : Walajabad ,Jaganathan ,Ayyampet Upper Street, Walajabad ,Jagannathan ,Dinakaran ,
× RELATED வாலாஜாபாத் சார்பதிவாளர் அலுவலகத்தில்...