புதுடெல்லி: கீர்த்தி நகர் கார்பெண்டரின் உதவியோடு ராகுல் காந்தியால் தயாரிக்கப்பட்ட மேசை மற்றும் பர்னிச்சர் சிறப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளிக்கு வழங்கப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்பியுமான ராகுல்காந்தி, கடந்த செப்டம்பர் 28 அன்று கிர்த்தி நகர் மரச்சாமான்கள் சந்தைக்கு சென்று அப்போது அங்குள்ள பர்னிச்சர் கடை ஒன்றில் கார்பெண்டர் ஒருவர் நாற்காலி, மேஜைகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார். இதையடுத்து, அந்த கடைக்குள் சென்ற ராகுல்காந்தி, கார்பெண்டருடன் சேர்ந்து தச்சுவேலையில் ஈடுபட்டு மேஜைகளை தயாரித்தார்.
இந்நிலையில், கார்பெண்டரின் உதவியோடு ராகுலின் கைவண்ணத்தில் உருவான மேஜைகள் மற்றும் நாற்காலிகள் கார்கார்துமாவில் இயங்கி வரும் பிரேமலா பாய் சவான் சிறப்பு மாற்றுத்திறன் பள்ளிக்கு தீபக் பபாரியா முன்னிலையில் வழங்கப்பட்டது. தீபக் பபாரியா, அகில இந்திய காஙகிரஸ் கட்சியின் பொறுப்பாளராக உள்ளார். இதுகுறித்து லவ்லி வெளியிட்டுள்ள அறிக்கையில்,”பள்ளி இப்போது காங்கிரசுடன் வலுவான பிணைப்பை உருவாக்கிக் கொண்டுள்ளது. அதன் தேவைகளைப் பூர்த்தி செய்ய காங்கிரஸ் குடும்பம் தேவையான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் வழங்கும். ராகுல்காந்தி ஏழைகள், நிதி நெருக்கடியில் உள்ள மற்றும் ஆதரவற்ற மக்கள் நலனில் எப்போதும் மிகுந்த அக்கறை கொண்டவர் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
The post ராகுல் காந்தி செய்த மேஜை, நாற்காலி மாற்றுத் திறன் பள்ளிக்கு பரிசு appeared first on Dinakaran.