×

மர்ம காய்ச்சலுக்கு பஸ் கண்டக்டர் பலி

 

சேந்தமங்கலம், நவ.22: புதுச்சத்திரம் ஒன்றியம் காரைக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (48). இவர் நாமக்கல் அரசு போக்குவரத்து பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவுசல்யா. இவர்களுக்கு ஹேமா, நித்திஷ்a குமார் என்ற மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அசோக்குமாருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து நாமக்கல், ஈரோடு, சேந்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், காய்ச்சல் குணமாகவில்லை.

இந்நிலையில், கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அசோக்குமார் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அசோக்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதாரத் துறையினர், அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். காய்ச்சல் தடுப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

The post மர்ம காய்ச்சலுக்கு பஸ் கண்டக்டர் பலி appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Ashokumar ,Karaikurichchi ,Puduchattaram Union ,Namakkal ,Government ,Transport Workshop ,
× RELATED மின்னணு வாக்குப்பதிவு செயல் விளக்க முகாம்