×

பிளம்பர் தீக்குளித்து தற்கொலை ராஜாக்கமங்கலம் அருகே பரிதாபம்

ஈத்தாமொழி, நவ.22: ராஜாக்கமங்கலம் அருகே தீக்குளித்த பிளம்பர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். ராஜாக்கமங்கலம் பரமன்விளை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (65) பிளம்பர். நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததால் சீனிவாசன் மனவேதனையில் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 8ம் தேதி ஆலங்கோட்டை பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்திற்கு சென்ற சீனிவாசன் பிளம்பிங் வேலைக்கு பயன்படுத்தப்படும் திரவம் ஒன்றை எடுத்து தனது உடலில் பூசியுள்ளார். பின்னர் தனக்குத்தானே தீவைத்து தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயமடைந்த சீனிவாசன் மீட்கப்பட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் இறந்தார். அவரது மகன் தனசேகர் அளித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீஸ் எஸ்ஐ எட்வர்ட் பிரைட் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சீனிவாசன் ஏற்கனவே கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்று ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பிளம்பர் தீக்குளித்து தற்கொலை ராஜாக்கமங்கலம் அருகே பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Rajakamangalam ,Ethamozhi ,Srinivasan ,Rajakamangalam Paramanvilai ,
× RELATED கன்னியாகுமரி – நாகர்கோவில் சாலையில்...