×

திருப்பூர் பஸ் நிலையத்தில் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது

 

திருப்பூர், நவ.22: கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் கோபி (46). இவர் நேற்று திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் நின்ற போது 2 வாலிபர்கள் வந்து அவரிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துச்சென்றுள்ளனர். இதுகுறித்து கோபி அளித்த புகாரின் பேரில் தெற்கு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் செல்போனை பறித்தது தொடர்பாக 2 பேரை பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் தென்காசி குற்றாலம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (23), விருதாச்சலம் பகுதியை சேர்ந்த சரவணன் (29) என்பதும், வேலை தேடி திருப்பூர் வந்தவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

The post திருப்பூர் பஸ் நிலையத்தில் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruppur bus station ,Tiruppur ,Gobi ,Karnataka ,Bengaluru ,Tiruppur Central Bus Station ,
× RELATED பிரதமர் திருப்பூர் வருகையை...