×

திருப்பூர் 40-வது வார்டில் ரூ.1.51 கோடி மதிப்பில் சாலை பணிகள்

 

திருப்பூர், நவ.22: திருப்பூர் மாநகராட்சி 40-வது வார்டுக்கு உட்பட்ட இடுவம்பாளையம் பகுதியில், மாநகராட்சி சிறப்பு நிதி திட்டத்தில் ரூ.1 கோடியே 51 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில், புதிதாக அமைக்கப்படவுள்ள பல்வேறு தார் சாலைகளுக்கான பணிகளை, திமுக திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான க.செல்வராஜ் நேற்று துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன், வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், பகுதி செயலாளர் முருகசாமி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கலைச்செல்வி, வட்டக் கழக செயலாளர் சீனிவாசன், மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, கவுன்சிலர் சுபத்ராதேவி, சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் துரை.ரவிச்சந்திரன், ஆனந்தன், நிர்வாகி சிவபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருப்பூர் 40-வது வார்டில் ரூ.1.51 கோடி மதிப்பில் சாலை பணிகள் appeared first on Dinakaran.

Tags : Tirupur 40th Ward ,Tirupur ,Ituvampalayam ,40th Ward ,Tirupur Corporation ,Dinakaran ,
× RELATED கடும் வெயிலில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு குளிர்பானம்