×

பட்டா வழங்காததை கண்டித்து இருளர் மக்கள் போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 210 இருளர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் குடிமனை பட்டா கேட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம், ஊத்துக்கோட்டை, ஆவடி, பூந்தமல்லி ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு பலகட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில், வருவாய்த்துறையினர் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்து 3 ஆண்டுகள் கடந்த பின்னரும் தங்களுக்கு பட்டா வழங்காத நிலையில் திருவள்ளூர் ஆர்டிஓ அலுவலகம் முன்பு 11 கிராமங்களை சேர்ந்த இருளர் இன மக்கள் நேற்று காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் விஜயகுமாரி சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சு நடத்தினார். அடுத்த 10 நாட்களில் உறுதியாக பட்டா வழங்கப்படும். சில இடங்களில் தனியார் நிலங்களை வாங்கி பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனக்கூறி ஆவண நகல்களை நிர்வாகிகளிடம் வழங்கினார். மேலும், வாசனம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தமிழரசி என்பவருக்கு அடையாளப்பூர்வமாக ஒரு பட்டா வழங்கப்பட்டது.

The post பட்டா வழங்காததை கண்டித்து இருளர் மக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Irula ,Tiruvallur ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...