×

இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு மத்தியில் சீன மண்ணில் முஸ்லீம் நாடுகளின் தலைவர்கள்: பாலஸ்தீனத்தை ஆதரிப்பதாக சீனா உறுதி

பீஜிங்: இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு மத்தியில், சீனாவில் நடந்த கூட்டத்தில் முஸ்லீம் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 40 நாட்களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போருக்கு மத்தியில், சீன அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், முஸ்லீம் நாடுகளான சவூதி அரேபியா, எகிப்து, ஜோர்டான், பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களின் சந்திப்பு நடந்தது.

இரண்டு நாட்கள் நடந்த இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கம், மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சி என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் சவுதி அரேபிய வெளியுறவுத்துறை அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத், முஸ்லிம் மற்றும் அரபு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ கூறுகையில், ‘முஸ்லீம் நாடுகளின் நல்ல நண்பராகவும், சகோதரனாகவும் சீனா விளங்கி வருகிறது. நாங்கள் பாலஸ்தீனத்தை ஆதரித்து வருகிறோம். பாலஸ்தீன மக்களின் தேசிய உரிமைகளைப் பாதுகாக்க விரும்புகிறோம்’ என்றார்.

The post இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு மத்தியில் சீன மண்ணில் முஸ்லீம் நாடுகளின் தலைவர்கள்: பாலஸ்தீனத்தை ஆதரிப்பதாக சீனா உறுதி appeared first on Dinakaran.

Tags : Israel ,Hamas ,China ,Palestine ,Beijing ,
× RELATED ஈரான் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை...