×

தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு: 2024 ஜன.12ல் நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடத்த இந்திய கூட்டணியின் மாணவர்கள் அமைப்பு முடிவு..!!

டெல்லி: 2024 ஜனவரி 12ல் நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய கூட்டணியின் மாணவர் அமைப்பு சார்பில் அடுத்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நாடாளுமன்றத்தை முற்றுகையிட போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இந்திய கூட்டணி கட்சியின் மாணவர்கள் அமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

16 மாணவர்கள் அமைப்பு சேர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளது. தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. “கல்வியை காப்பாற்றுவோம்; தேசிய கல்வி கொள்கையை நிராகரிப்போம்”. “இந்தியாவை காப்பாற்றுவோம்; பாஜகவை நிராகரிப்போம்” என்று 16 மாணவர்கள் அமைப்பு சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று பிற்பகல் 12 மணியளவில் செய்தியாளர் சந்திப்பில் விரிவாக எடுத்துரைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு: 2024 ஜன.12ல் நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடத்த இந்திய கூட்டணியின் மாணவர்கள் அமைப்பு முடிவு..!! appeared first on Dinakaran.

Tags : Students Organization of Indian Alliance ,Parliament ,Delhi ,Student Organization of the Indian Alliance ,
× RELATED அதிகாரிகள் இடமாற்றம் தேர்தல் ஆணையம் கண்டிப்பு