×

ஈரோட்டில் மாயமான 85 ஸ்மார்ட் போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

 

ஈரோடு, நவ.21: ஈரோடு மாவட்டத்தில் மாயமான ரூ.14.12 லட்சம் மதிப்பிலான 85 ஸ்மார்ட் போன்களை கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களிடம் எஸ்பி ஜவகர் வழங்கினார். ஈரோடு மாவட்டத்தில் ஸ்மார்ட் போன்கள் தொலைந்து விட்டதாக கூறி ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் கடந்த 2022ம் ஆண்டு முதல் கடந்த மாதம் வரை பொதுமக்கள் புகார் அளித்தனர். இந்த புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்த எஸ்பி ஜவகர், ஈரோடு சைபர் செல் பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதன்மூலம், புகார்தாரர்களிடம் செல்போன் தொலைந்த இடம், தேதி மற்றும் இதர விவரங்கள் பெற்று, அதனை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்பேரில், போலீசார் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மாயமான ரூ.14 லட்சத்து 12 ஆயிரத்து 385 மதிப்பிலான 85 ஸ்மார்ட் போன்களை கண்டுபிடித்தனர். அதனை உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இதில், எஸ்பி ஜவகர் பங்கேற்று, மீட்கப்பட்ட 85 ஸ்மார்ட் போன்களையும் அதன் உரிமையாளர்களிடம் வழங்கினார். உடன் ஏடிஎஸ்பி ராஜேந்திரன், எஸ்ஐ செல்வி ஆகியோர் உடனிருந்தனர். கடந்த 2022ம் ஆண்டு முதல் தற்போது வரை மாயமான ரூ.1 கோடியே 52 லட்சத்து 35 ஆயிரத்து 202 மதிப்பிலான 1,035 ஸ்மார்ட் போன்கள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஈரோட்டில் மாயமான 85 ஸ்மார்ட் போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode district ,Dinakaran ,
× RELATED ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வாக்கு...