×

இளை­ஞர் அணி­யின் பெரு­மையை நாடே உண­ரும் வகை­யில் சேலம் மாநாட்டை நடத்­தி காட்­டு­வோம்: அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: ‘‘இளை­ஞர் அணி­யின் பெரு­மையை நாடே உண­ரும் வகை­யில் சேலம் மாநாட்டை நடத்­திக் காட்­டு­வோம்’’ என்று அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக இளை­ஞர் அணி­யின் 2வது மாநில மாநாடு வரும் டிசம்­பர் மாதம் 17ம் தேதி சேலம் மாவட்­டத்­தில் நடை­பெற உள்­ளது. மாநாட்­டுப் பணி­களை ஒருங்­கி­ணைப்­ப­தற்­காக திமுக தலை­மைக் கழ­கத்­தால் 23 குழுக்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. அந்த குழுக்­க­ளின் செய­லா­ளர்­க­ளு­ட­னான ஆலோ­ச­னைக் கூட்­டம் சென்னையில் நடந்தது. கூட்டத்துக்கு முதன்­மைச் செய­லா­ளர் அமைச்­சர் கே.என்.நேரு தலை­மை­ தாங்கினார்.

இதில் திமுக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் அமைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் கலந்­து­ கொண்டு பேசி­ய­தா­வது: திமுக இளை­ஞர் அணி­யின் மாநில மாநாடு 16 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு இப்­போ­து­ தான் நடை­பெ­று­கி­றது. வரும் டிசம்­பர் 17ம் தேதி சேலத்­தில் நடை­பெற உள்ள இளை­ஞர் அணி மாநாடு, நம் இளை­ஞர் அணி­யின் பெரு­மையை, திமுகவின் கட்­ட­மைப்பை இந்­திய ஒன்­றி­யமே உணர்ந்­து­ கொள்­ளும் வகை­யில் நடை­பெற இருக்­கி­றது. லட்­சக்­க­ணக்­கான இளை­ஞர்­கள் கூடும் நம் இளை­ஞர் அணி மாநில மாநாட்­டுக்­கான ஏற்­பா­டு­கள் எந்­த­ள­வுக்கு நேர்த்­தி­யாக திட்­ட­மி­டப்­பட வேண்­டும் என்­பதை நீங்­கள் உணர்ந்­தி­ருப்­பீர்­கள். மாநாட்­டுக்­கான பணி­களை நாம் அனை­வ­ரும் இணைந்­து­ தான் செய்­யப்­ போ­கி­றோம்.

இந்த மாநாட்டை நடத்­து­வ­தற்கு நமக்கு மிகப்­பெ­ரிய பல­மாக முதன்­மைச் செய­லா­ளர் நேரு உள்­ளார்­. பல மாநாட்டை நடத்­திய அனு­ப­வம் அவ­ருக்கு உள்­ளது. இதில் நாம் என்ன தவறு செய்­வோம் என பலர் காத்­தி­ருக்­கி­றார்­கள். அத­னால் விமர்­ச­னத்­துக்கு இட­ம­ளிக்­கா­மல், இந்த மாநாட்டை வெற்­றி­க­ர­மாக நடத்­திக்­காட்ட வேண்­டிய பொறுப்பு நம் அனை­வ­ருக்­கும் உள்­ளது. சட்­ட­மன்ற, நாடா­ளு­மன்­ற தேர்­த­லுக்கு முன்­பாக தலை­மைக் கழ­கமே மாநில மாநாட்­டையோ, மண்­டல மாநாட்­டையோ நடத்­து­வது வழக்­கம். ஆனால் வரும் 2024 நாடா­ளு­மன்­றத் தேர்­த­லுக்கு முன்­பாக மாநாட்டை நடத்­தும் மிகப்­பெ­ரிய வாய்ப்பை, பொறுப்பை நம் தலை­வர் மு.க.ஸ்டாலின் இளை­ஞர் அணிக்கு வழங்­கி­யுள்­ளார்­. தலை­வர் நம் மீது வைத்­துள்ள நம்­பிக்­கையை நம் செய­லின் மூலம் நிரூ­பிக்க வேண்­டி­யது நம் கடமை.

The post இளை­ஞர் அணி­யின் பெரு­மையை நாடே உண­ரும் வகை­யில் சேலம் மாநாட்டை நடத்­தி காட்­டு­வோம்: அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Salem ,Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Udhayanidhi Stalin ,
× RELATED மக்களுடைய மகிழ்ச்சியே முக்கியம் என்ற...