திருப்பூர், நவ.21: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக 100 இருக்கைகளை ஏற்படுத்தி கலெக்டர் கிறிஸ்துராஜ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தரை தளத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாற்றுத்திறனாளி அலுவலகம், ஆதார் மையம், பொது சேவை மையம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடு அலுவலகம், வாக்காளர்கள் சேவை மையம், வங்கிகள், தபால் அலுவலகம் போன்ற பல்வேறு சேவை மையங்கள் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம், ஓய்வூதியர்களின் குறைதீர்க்கும் கூட்டம் உள்ளிட்ட கூட்டங்களுக்கு பொதுமக்கள் எளிய முறையில் சேவைகளை பெற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் வயதானவர்கள், ஊனமுற்றோர்கள் மற்றும் உடல் நலம் குறைவாக உள்ளவர்கள் வரிசையில் நின்று சேவைகளை பெற்று வருவதனால் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் அதனை கவனத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, தரை தளத்தில் உள்ள மாற்றுத்திறனாளி அலுவலகம், ஆதார் மையம், பொது சேவை மையம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடு அலுவலகம், வாக்காளர்கள் சேவை மையம், வங்கிகள், தபால் அலுவலகம், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கு போன்ற சேவை மையங்களில் சுமார் 100 இருக்கைகள் அமைக்கப்பட்டு இருக்கையில் அமர்ந்து சேவைகள் பெறும் விதமாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
The post மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களின் வசதிக்காக 100 இருக்கைகள் ஏற்பாடு appeared first on Dinakaran.