×

லட்சுமிபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: எம்எல்ஏ வழங்கினார்

புழல்: லட்சுமிபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ வழங்கினார். புழல் 33வது வார்டு லட்சுமிபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாதவரம் மண்டல குழு தலைவர் நந்தகோபால் தலைமை தாங்கினார்.

வார்டு கவுன்சிலர்கள் குணசுந்தரி குட்டி மோகன், ஏழுமலை, திருமலை துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீகாந்த் அனைவரையும் வரவேற்றார். சென்னை வடக்கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ கலந்துகொண்டு, 78 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இதில் திமுக நிர்வாகிகள் சுந்தரம், தசரதன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

The post லட்சுமிபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Lakshmipuram Corporation High School ,MLA ,Puzhal ,S. Sudarsanam ,Tamil Nadu government ,Lakshmipuram Municipal Corporation High School ,Lakshmipuram Corporation Higher Secondary School ,
× RELATED செங்குன்றம் அருகே பகுதி நேர ரேஷன் கடை: சுதர்சனம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்