- மாதவரம் எம். எல்.
- பஞ்சாயத்து யூனியன் முதன்மை பள்ளி
- புழல்
- சுதர்சனம்
- புழல் ஊராட்சி ஒன்றியம் புழல்
- கிராண்ட் லைன் பஞ்சாயத்து தொடக்கப்பள்ளி
- ஊராட்சி ஒன்றிய முதன்மை
புழல்: புழல் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம் குறித்து மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் ஆய்வு செய்தார். புழல் ஊராட்சி ஒன்றியம் புழல் அடுத்த கிராண்ட் லைன் ஊராட்சி துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 72 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தமிழக முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தை பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் முன்னிட்டு கடந்த 15ஆம் தேதி விரிவுபடுத்தப்பட்டது. இந்நிலையில், மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ சுதர்சனம் நேற்று ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சென்று காலை சிற்றுண்டி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் மாணவர்களின் கல்வி தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் புழல் ஒன்றிய குழு தலைவர் தங்கமணி திருமால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணி சேகர், சித்ரா பெர்னாண்டோ, ஒன்றிய குழு துணைத் தலைவர் சாந்தி பாஸ்கரன், ஒன்றிய கவுன்சிலர் சிவக்குமார், பள்ளி தலைமையாசிரியை சாந்தகுமாரி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
The post புழல் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை மாதவரம் எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.