×

பெரியபாளையத்தில் பாலம் அமைக்கும் பணியால் போக்குவரத்து நெரிசல்: விரைந்து முடிக்க வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில் மந்த கதியில் நடந்து வரும் பாலம் அமைக்கும் பணியால் அடிக்கடி விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பெரியபாளையம் கிராமம் உள்ளது. இங்கு பெரியபாளையம் ஆரணியாற்றில் இருந்து பனப்பாக்கம் ஏரிக்கு இந்த சாலையின் குறுக்கே உள்ள சிறு பாலம் வழியாக தண்ணீர் செல்லும்.

இந்நிலையில் இந்த பாலம் பழுதடைந்ததால், புதிய பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் படி கடந்த மார்ச் மாதம் ரூ.90 லட்சம் செலவில் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியது. ஆனால் இந்த பணிகள் மந்த கதியில் நடந்து வருவதால் அப்பகுதியில் விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே இந்த பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பெரியபாளையத்தில் பாலம் அமைக்கும் பணியால் போக்குவரத்து நெரிசல்: விரைந்து முடிக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Periyapalayam ,Oothukottai ,Dinakaran ,
× RELATED ஆண் புள்ளிமான் மீட்பு