×

ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் கழிப்பறை செல்ல கூடுதல் கட்டணம் ரூ.4-ஐ திருப்பி தர உத்தரவு..!

சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் கழிப்பறை செல்ல கூடுதல் கட்டணம் வசூலித்த வழக்கில் ரூ.4-ஐ திருப்பி தர உத்தரவிடப்பட்டுள்ளது. கழிப்பறைக்கு செல்ல ரூ.1-க்கு பதில் ரூ.5 வாங்கியதாக நுகர்வோர் நீதிமன்றத்தில் சுந்தரம் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். கூடுதலாக வசூலித்த ஐந்து ரூபாயில் நான்கு ரூபாயை திருப்பித் தரவும், ரூ.20,000 நஷ்டஈடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கு செலவு ரூ.10,000-ஐ நகராட்சி ஆணையர், கழிவறை குத்தகைதாரர் சேர்ந்தோ, தனித்தனியாகவோ வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

 

The post ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் கழிப்பறை செல்ல கூடுதல் கட்டணம் ரூ.4-ஐ திருப்பி தர உத்தரவு..! appeared first on Dinakaran.

Tags : Srivilliputur bus station ,Chennai ,
× RELATED தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!!