×

இளை­ஞர் அணி­யின் பெரு­மையை நாடே உண­ரும் வகை­யில் சேலம் மாநாட்டை நடத்­திக் காட்­டு­வோம்: அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: இளை­ஞர் அணி­யின் பெரு­மையை நாடே உண­ரும் வகை­யில் சேலம் மாநாட்டை நடத்­திக் காட்­டு­வோம் என்று அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக இளை­ஞர் அணி­யின் 2வது மாநில மாநாடு வரும் டிசம்­பர் மாதம் 17ம் தேதி சேலம் மாவட்­டத்­தில் நடை­பெற உள்­ளது. மாநாட்­டுப் பணி­களை ஒருங்­கி­ணைப்­ப­தற்­காக தலை­மைக் கழ­கத்­தால் 23 குழுக்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. அந்த குழுக்­க­ளின் செய­லா­ளர்­க­ளு­ட­னான ஆலோ­ச­னைக் கூட்­டம், முதன்­மைச் செய­லா­ளர் அமைச்­சர் கே.என்.நேரு தலை­மை­யில் சென்னையில் நடந்தது. இதில் திமுக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் அமைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் கலந்­து­ கொண்டு பேசி­ய­தா­வது: மாநாடு என்­பது அடிக்­கடி நடை­பெ­று­வது அல்ல.

எப்­போ­தா­வது ஒரு­மு­றை­தான் நடை­பெ­று­கி­றது. திமுக இளை­ஞர் அணி­யின் மாநில மாநாடு 16 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு இப்­போ­து­ தான் நடை­பெ­று­கி­றது. அந்த சம­யத்­தில் நாம் இளை­ஞர் அணி­யில் இருக்­கி­றோம் என்­பதே நமக்­கான பெருமை. அது­வும் இந்த மாநாட்­டுப் பணி­களை ஒருங்­கி­ணைப்­ப­தற்­காக தலை­மைக் கழ­கத்­தால் அறி­விக்­கப்­பட்ட குழுக்­க­ளில் நாம் இடம்­பெற்­றி­ருக்­கி­றோம் என்­பது கூடு­தல் பெருமை. வரும் டிசம்­பர் 17ஆம் தேதி சேலத்­தில் நடை­பெற உள்ள இளை­ஞர் அணி மாநாடு, நம் இளை­ஞர் அணி­யின் பெரு­மையை, திமுகவின் கட்­ட­மைப்பை இந்­திய ஒன்­றி­யமே உணர்ந்­து­ கொள்­ளும் வகை­யில் நடை­பெற இருக்­கி­றது. ஒரு நிகழ்ச்­சியை சிறப்­பாக நடத்­து­வ­தற்கு திட்­ட­மி­டு­தல் என்­பது மிக­மிக அவ­சி­ய­மான ஒன்று.

அந்த நிகழ்ச்­சி­யின் நோக்­கம் என்ன என்­பதை உணர்ந்­தால்­ தான், அந்த நோக்­கம் நிறை­வே­றும் வகை­யில் அந்த நிகழ்ச்­சியை மிகச்­ச­ரி­யாக வடி­வ­மைக்க முடி­யும். 100 பேர் கூடும் தெரு­மு­னைப் பிரசா­ரக் கூட்­டத்­துக்கே, பேச்­சா­ள­ராக யாரை அழைக்­க­லாம், என்ன தலைப்­பின் கீழ் அவரை பேச வைக்­க­லாம், பின்­ன­ணி­யில் ஃப்ளெக்ஸ் வைக்­க­லாமா, எல்­இடி வைக்­க­லாமா? அப்­படி வைக்­கப்­ப­டும் ஃப்ளெக்ஸ் பேன­ரில் என்­னென்ன வாச­கங்­கள் இடம் பெற வேண்­டும். 100 பேர் கூடும் கூட்­டத்­துக்கே அந்­த­ள­வுக்கு திட்­ட­மி­டு­கி­றோம் என்­றால், லட்­சக்­க­ணக்­கான இளை­ஞர்­கள் கூடும் நம் இளை­ஞர் அணி மாநில மாநாட்­டுக்­கான ஏற்­பா­டு­கள் எந்­த­ள­வுக்கு நேர்த்­தி­யாக திட்­ட­மி­டப்­பட வேண்­டும் என்­பதை நீங்­கள் அனை­வ­ரும் உணர்ந்­தி­ருப்­பீர்­கள்.

மாநாட்­டுக்­கான பணி­களை நாம் அனை­வ­ரும் இணைந்­து­தான் செய்­யப்­போ­கி­றோம். ஆனால் இந்­தப் பணியை அவர் பார்த்­து­வி­டு­வார், இவர் பார்த்­துக்­கொள்­வார் என்று இருந்து எந்­தப் பணி­யும் விடு­பட்­டு­வி­டக்­கூ­டாது என்­ப­தற்­கா­கத்­தான் இந்­தக் குழுக்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. இந்த மாநாட்டை நடத்­து­வ­தற்கு நமக்கு மிகப்­பெ­ரிய பல­மாக முதன்­மைச் செய­லா­ளர் நேரு உள்­ளார்­. பல மாநாட்டை நடத்­திய அனு­ப­வம் அவ­ருக்கு உள்­ளது. இதில் நாம் என்ன தவறு செய்­வோம் என பலர் காத்­தி­ருக்­கி­றார்­கள். அத­னால் விமர்­ச­னத்­துக்கு இட­ம­ளிக்­கா­மல், இந்த மாநாட்டை வெற்­றி­க­ர­மாக நடத்­திக்­காட்ட வேண்­டிய பொறுப்பு நம் அனை­வ­ருக்­கும் உள்­ளது. சட்­ட­மன்ற, நாடா­ளு­மன்­ற தேர்­த­லுக்கு முன்­பாக தலை­மைக் கழ­கமே மாநில மாநாட்­டையோ, மண்­டல மாநாட்­டையோ நடத்­து­வது வழக்­கம். ஆனால் வரும் 2024 நாடா­ளு­மன்­றத் தேர்­த­லுக்கு முன்­பாக மாநாட்டை நடத்­தும் மிகப்­பெ­ரிய வாய்ப்பை, பொறுப்பை நம் தலை­வர் மு.க.ஸ்டாலின் இளை­ஞர் அணிக்கு வழங்­கி­யுள்­ளார்­. தலை­வர் நம் மீது வைத்­துள்ள நம்­பிக்­கையை நம் செய­லின் மூலம் நிரூ­பிக்க வேண்­டி­யது நம் கடமை. இவ்­வாறு அவர் பேசினார்.

The post இளை­ஞர் அணி­யின் பெரு­மையை நாடே உண­ரும் வகை­யில் சேலம் மாநாட்டை நடத்­திக் காட்­டு­வோம்: அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Salem ,Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Udhayanidhi Stalin ,Salem conference ,
× RELATED மக்களுடைய மகிழ்ச்சியே முக்கியம் என்ற...