×

இந்திய அணிக்கு மோடி, ராகுல் வாழ்த்து

புதுடெல்லி: ஆஸ்திரேலியா கோப்பையை வென்ற நிலையில், இந்திய அணிக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். உலக கோப்பை கிரிட்கெட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘உலகக் கோப்பையில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள். போட்டியின் மூலம் அவர்களின் பாராட்டுக்குரிய செயல்திறன் மற்றும் அற்புதமான வெற்றியில் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட்க்கு பாராட்டுக்கள்.

அன்புள்ள இந்திய அணி வீரர்களே… உலகக் கோப்பை போட்டியில் உங்களது திறமையும் உறுதியும் குறிப்பிடத்தக்கது. நீங்கள் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடி தேசத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறீர்கள். நாங்கள் இன்றும் எப்போதும் உங்களுடன் துணை நிற்கிறோம்’ என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், ‘இந்திய அணி வீரர்களே… நீங்கள் போட்டியில் சிறப்பாக விளையாடினீர்கள். வெற்றியோ அல்லது தோல்வியோ, நாங்கள் உங்களை நேசிக்கிறோம். அடுத்த முறை வெல்வோம். உலகக் கோப்பை வெற்றிக்கு தகுதியான ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

The post இந்திய அணிக்கு மோடி, ராகுல் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Modi ,Rahul ,New Delhi ,Rahul Gandhi ,Australia Cup ,Dinakaran ,
× RELATED சாலையில் விழுந்து கிடக்கிறார்கள்...