×

அமெரிக்காவிலும் விமரிசையாக நடைபெற்ற சத் பூஜை: நீர்நிலைகளில் திரண்டு இந்திய வம்சாவளியினர் வழிபாடு..!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் புகழ்பெற்ற சத் பூஜையை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்தியாவின் வடமாநிலங்களில் சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சாத் பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் நியூ ஜெர்சி, நியூயார்க்கில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் நீர் நிலைகளில் திரண்டு பாரம்பரிய முறைப்படி சத் பூஜையை கொண்டாடினர். பூஜை பொருட்கள் வைத்து தீபங்கள் ஏற்றி சூரிய பகவானை வழிபட்டனர். நீண்ட ஆயுள் மற்றும் குடும்பநலனை வேண்டி பிரார்த்தனை செய்தனர். சத் பூஜையை முன்னிட்டு நீர் நிலைகள் அமைந்துள்ள பகுதி மணல்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

சத் பூஜை:

சத் விரத பூஜை என்பது பீகார், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய வடமாநிலங்களில் பெரிய அளவில் கொண்டாடப்படும் விழாவாகும். இந்து மத விழாவான சாத் விரத பூஜை சூரிய கடவுளுக்கும் மற்றும் அவரது மனைவிக்கும் நன்றி சொல்ல நடத்தப்படும். நான்கு நாட்களுக்கு இந்த பூஜை நடைபெறும். நான்காவது நாளில் நீர் நிலைகளில் கூடி மக்கள் பூஜை செய்து சூரிய பகவானை வழிபடுவர்.

நான்காவது நாளில் சூரிய உதயத்தின் போது நீர் நிலைகளில் நின்று பெண்கள் படைப்பார்கள். மூங்கில் சிம்புகள் பின்னப்பட்ட தட்டு அல்லது முறத்தில் காய்கறிகள், பழங்கள் போன்ற இயற்கையில் விளையும் பொருட்களை வைத்து படைப்பார்கள். சன்னமான அரிசி மாவு, நெய், சர்க்கரை கொண்டு தயாரிக்கப்பட்ட சுவையான பதார்த்தை படைத்து உண்பார்கள் என்பது நினைவுகூரத்தக்கது.

The post அமெரிக்காவிலும் விமரிசையாக நடைபெற்ற சத் பூஜை: நீர்நிலைகளில் திரண்டு இந்திய வம்சாவளியினர் வழிபாடு..!! appeared first on Dinakaran.

Tags : Sadh Puja ,America ,Washington ,US ,Sat ,Puja ,Sun ,God ,northern states of ,India ,
× RELATED தைவானில் இருந்து அமெரிக்கா சென்ற...