×

உறவினர் வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

 

ஊட்டி, நவ.20: நீலகிரி மாவட்டம், ஊட்டி தலைகுந்தா அருகே அழகர்மலையை சேர்ந்தவர் ரமேஷ் (35). கூலி தொழிலாளி. ரமேஷ் சமீபகாலமாக அவருடைய உறவினர்களின் வீடுகள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் வீடுகளில் சிறு சிறு தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். சிறிய தொகை அல்லது பொருட்களை திருடியதால் பெரும்பாலானவர்கள் புகார் கொடுக்காமல் அவருக்கு அறிவுரை கூறி வந்தனர். தொடர்ந்து, திருட்டில் ஈடுபட்டு வந்ததால், உள்ளூரில் வசிக்க உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் ரமேஷ் கர்நாடக மாநிலம் மைசூர் சென்று வேலை செய்து வந்தார். இந்நிலையில் மீண்டும் ஊருக்கு வந்த ரமேஷ், தீபாவளிக்கு முதல் நாளான்று பட்டர்கம்பை பகுதியில் உள்ள தூரத்து உறவினர் தேவி என்பவரின் வீட்டுக்கு நலம் விசாரிக்க சென்றுள்ளார். மறு நாள் தீபாவளி தினத்தன்று தேவி குடும்பத்தினருடன் வெளியில் சென்றிருந்த சமயத்தில் ரமேஷ், தேவியின் வீட்டிற்குள் வீடு புகுந்து 4 கிராம் தங்க நகை மற்றும் ரூ.15 ஆயிரம் பணத்தை திருடி விட்டு மீண்டும் மைசூர் சென்று விட்டார்.

வீட்டில் திருடு போயிருந்தது குறித்து பார்த்து அதிர்ச்சி அடைந்த தேவி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் ஆய்வாளர் மணிக்குமார், உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து மைசூரில் பதுங்கி இருந்த ரமேஷை கைது செய்தனர்.
பின்னர் அவரை ஊட்டி அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post உறவினர் வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது appeared first on Dinakaran.

Tags : Ooty ,Ramesh ,Alagarmalai ,Thalikunda, Nilgiris district ,
× RELATED குன்னூர், ஊட்டியில் குவிந்த சுற்றுலா...