×

பாஜவுடன் ரகசிய உறவா? இபிஎஸ் பதில்

தர்மபுரி: பாஜவுக்கும், அதிமுகவுக்கும் தொடர்பா என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்து உள்ளார். தர்மபுரியில் நேற்று நடந்த திருமண விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அதிமுகவும், பாஜவும் மறைமுகமாக உறவு வைத்திருப்பது போன்று பேசி வருகின்றனர். அதிமுக, பாஜ கூட்டணி பிரிந்து விட்டதை தெளிவாக அறிவித்து விட்டோம். இதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் எதையெல்லாமோ பேசி வருகின்றனர். மீண்டும் தெரிவிக்கிறேன், அதிமுகவுக்கும், பாஜவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

The post பாஜவுடன் ரகசிய உறவா? இபிஎஸ் பதில் appeared first on Dinakaran.

Tags : Baja ,EPS ,Dharmapuri ,Edappadi Palaniswami ,BJP ,AIADMK ,Dinakaran ,
× RELATED நடிகை ஷோபனா பாஜ சார்பில் போட்டியிட மாட்டார்: சசிதரூர் எம்பி பேட்டி