×

இளைஞர் அணி மாநாடு விழிப்புணர்வு: இரு சக்கர வாகன பேரணி வழியனுப்பும் நிகழ்ச்சி

 

ஊட்டி, நவ. 19: இளைஞர் அணி மாநாடு விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி கோவை மாவட்டம் சென்றது. ஊட்டியில் மாவட்ட நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர். டிசம்பர் மாதம் 27ம் தேதி 2வது இளைஞர் அணி மாநாடு 2023 சேலத்தில் நடக்கிறது. இந்த மாநாடு குறித்து பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இரு சக்கர வாகன பேரணி நடக்கிறது. இந்த பேரணி கடந்த 15ம் தேதி கன்னியாகுமரியில் துவங்கியது.

திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். 14 நாட்கள் நடக்கும் இந்த இரு சக்கர வாகன பேரணி தமிழகத்தின் நான்கு மண்டலங்களில் 8 ஆயிரத்து 647 கி.மீ., தூரம் செல்கிறது. நேற்று முன்தினம் இந்த இரு சக்கர வாகன பேரணி ஊட்டி வந்தடைந்தது.  அப்போது, அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று கூடலூர் மற்றும் கோத்தகிரி போன்ற பகுதிகளுக்கு சென்ற அவர்கள் கோவை மாவட்ட சூலூர் சென்றனர்.

முன்னதாக அவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் நடந்தது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், மாவட்ட பொருளாளர் நாசர்அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் இளங்கோ, மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஷ்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் இமயம் சசிகுமார், சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டு அவர்களை வழியனுப்பி வைத்தனர்.

The post இளைஞர் அணி மாநாடு விழிப்புணர்வு: இரு சக்கர வாகன பேரணி வழியனுப்பும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Youth Team Conference ,Two-Wheeler Rally ,Ooty ,Coimbatore ,Youth team ,wheeler ,Dinakaran ,
× RELATED ஊட்டி மலைப்பாதையில் 60 அடி பள்ளத்தில்...