×

உபியில் ஹலால் உணவு பொருள் விற்பனைக்கு தடை


லக்னோ: ஹலால் குறியீட்டுடன் கூடிய உணவு பொருட்கள் விற்பனைக்கு உ.பி. அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து உ.பி.மாநில உணவு துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு,ஹலால் சான்றிதழுடன் வரும் உணவு பொருள்களை உற்பத்தி செய்வது, சேகரிப்பது மற்றும் விற்பனை செய்வது மாநிலத்தில் உடனடியாக தடை செய்யப்பட்டுள்ளது.

உணவு பொருட்கள் சட்டத்தின் 89 வது பிரிவின் படி இது ஏற்று கொள்ளகூடியதாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உ.பி. தலைநகர் லக்னோவில் உணவு பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ்களை வழங்கியதாக ஒரு நிறுவனம் மற்றும் மூன்று அமைப்புகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக ஹலால் தயாரிப்புகளுக்கு மாநிலம் முழுவதும் உத்தரபிரதேச அரசு தடை விதித்துள்ளது.

The post உபியில் ஹலால் உணவு பொருள் விற்பனைக்கு தடை appeared first on Dinakaran.

Tags : UP ,Lucknow ,UP State Food Department ,Dinakaran ,
× RELATED பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட...