×

ராஜஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் பாஜக மாஜி பெண் முதல்வரின் வைர மோதிரம் கீழே விழுந்தது எப்படி? ஹெலிகாப்டர் தளத்தில் நடந்த திடீர் பரபரப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் பாஜக மாஜி பெண் முதல்வரின் வைர மோதிரம் கீழே விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் பிரசாரம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, சிரோஹி அடுத்த ஜவால் சென்றார். ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய வசுந்தரா ராஜே, சில அடிகள் தூரம் நடந்தார். பின்னர், திடீரென ஹெலிகாப்டரை நோக்கி நடக்க தொடங்கினார். அவரது செயலை பார்த்து மூத்த நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். வசுந்தரா ராஜே தனது நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு திரும்பிச் ெசல்வதாக நினைத்தனர்.

ஆனால் அடுத்த சில நிமிடங்களில், மக்கள் கூட்டத்தை நோக்கி மீண்டும் வசுந்தரா ராஜே நடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், வசுந்தரா ராஜே ஹெலிகாப்டரை நோக்கி திரும்பி வருவது தெரிகிறது. அப்போது ஹெலிகாப்டரில் இருக்கும் வசுந்தரா ராஜேவின் உதவியாளர் ஒருவர், அங்கு எதையோ தேடுகிறார். ஹெலிகாப்டர் நோக்கி சென்ற வசுந்தரா ராஜே, அந்த இளைஞரிடம் ஏதோ சொல்கிறார். உடனே அந்த இளைஞர் ஹெலிகாப்டரில் இருந்து கீழே இறங்குகிறார். பின்னர் அந்த இளைஞரிடம் சைகை ெமாழியில், வசுந்தரா ராஜே ஏதோ கூறுகிறார்.

அந்த இளைஞர் கீழே தரையில் எதையோ தேடினார். பின்னர் அவர், தரையில் கிடந்த வைர மோதிரத்தை எடுத்து வசுந்தரா ராஜேவிடம் ஒப்படைத்தார். அதன்பின்னர், மக்களை நோக்கி வசுந்தரா ராஜே நடந்து சென்றார். இந்த வீடியோவின்படி பார்த்தால், ஹெலிகாப்டரில் இருந்து வசுந்தரா ராஜே கீழே இறங்கும் போது, அவரது கையில் இருந்த வைர மோதிரம் கீழே விழுந்துள்ளது. அதனை எடுக்கவே தனது உதவியாளரான அந்த இளைஞரை அழைத்துள்ளார். அவர் தரையில் கிடந்த வைர மோதிரத்தை எடுத்து கொடுத்த பின்னர் வசுந்தரா ராஜே பிரசாரத்தில் கலந்து கொண்டார்.

The post ராஜஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் பாஜக மாஜி பெண் முதல்வரின் வைர மோதிரம் கீழே விழுந்தது எப்படி? ஹெலிகாப்டர் தளத்தில் நடந்த திடீர் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : BJP Maji ,Rajasthan election ,Jaipur ,BJP ,Rajasthan ,Dinakaran ,
× RELATED முந்தைய முறையை விட தேர்தல் பத்திர...