×

சிங்கம்புணரி சுற்றுவட்டார கண்மாய்களில் தண்ணீர் இல்லாததால் விவசாய பணிகள் தொடங்குவதில் சிக்கல்

 

சிங்கம்புணரி, நவ. 18:சிங்கம்புணரி பகுதியில் உள்ள கண்மாய்களில் தண்ணீர் இல்லாததால் விவசாய பணிகள் தொடங்குவதில் சிக்கல் நிலவுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். சிங்கம்புணரி பகுதியில் நெல் மற்றும் கடலை விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. சிங்கம்புணரி பகுதியில் பாலாறு மற்றும் பெரியாரை நீட்டிப்பு கால்வாய் பாசனம் மூலம் விவசாய பணிகள் நடைபெற்று வந்தது. இந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் கரந்தமலை பகுதியில் போதிய மழை இல்லாததால் பாலாற்றில் தண்ணீர் வரத்து இல்லை.

இதனால் பெரும்பாலான கண்மாய்கள் தண்ணீர் இன்றி வறண்டு உள்ளது. ஒரு சில கண்மாய்களில் பாதி அளவு மட்டுமே தண்ணீர் உள்ளது. கடந்த வாரம் நல்ல மழை பெய்து வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி இருந்தும் பிரான்மலை வேங்கைபட்டி, கிருங்காக் கோட்டை, காளாப்பூர், உள்ளிட்ட கிராமங்களில் கண்மாய்களில் தண்ணீர் இல்லாததால் விவசாய பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. குறைந்த அளவு விவசாயிகள் போர்வெல்லை நம்பி நெல் நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு பெரும்பாலான விளைநிலங்கள் நெல் விளைவிக்கப்பட்டு வருமானம் பார்த்த நிலையில் இந்த ஆண்டு மழை இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர்.

The post சிங்கம்புணரி சுற்றுவட்டார கண்மாய்களில் தண்ணீர் இல்லாததால் விவசாய பணிகள் தொடங்குவதில் சிக்கல் appeared first on Dinakaran.

Tags : Kanmais ,Singampunari ,
× RELATED சிங்கம்புணரியில் எருதுகட்டு விழா