×

ஆடுகள் வரத்து அதிகரிப்பால் ₹22 லட்சத்திற்கு வர்த்தகம் ஒரு ஜோடி ₹25 ஆயிரத்துக்கு விற்பனை ஒடுகத்தூர் சந்தையில்

ஒடுகத்தூர், நவ.18: ஒடுகத்தூரில் கடும் பணி பொழிவிலும் ஆடுகள் வரத்து அதிகரித்து நேற்று ஒரே நாளில் ₹22 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. ஒரு ஜோடி ஆட்டின் விலை ₹25 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. ஒடுகத்தூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் தங்கள் வளர்க்கும் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதனால் வாரந்தோறும் ₹20 லட்சம் முதல் ₹25 லட்சம் வரை ஆடுகள் விற்பனை நடக்கிறது. அதே வேளையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தின்போது திருவிழாவையொட்டி பல லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடப்பதும், புரட்டாசி மாதங்களில் சில லட்சங்களுக்கு மட்டுமே விற்பனை நடப்பதும் வழக்கம். இந்நிலையில், வழக்கம்போல் நேற்று நடந்த ஆட்டு சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து 1000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வரப்பட்டது. கடும் பணி பொழிவிலும் காலை 6 மணி முதலே விற்பனை சூடுபிடிக்க தொடங்கியது.

அதேபோல், வியாபாரிகளும் போட்டி போட்டு கொண்டு ஆடுகளை விற்பனை செய்ய தொடங்கினர். தற்போது பண்டிகை நாட்கள் என்பதால் ஆடுகளின் விலை கிடுகிடு வென்று உயர்ந்தது. ஒரு ஜோடி ஆட்டின் விலை ₹25 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘கடந்த சில மாதங்களாகவே ஆடு விற்பனை மந்தமாக காணப்பட்டது. இதனால், விற்பனைக்காக கொண்டு வந்த ஆடுகளை பலர் ஏமாற்றத்துடன் திரும்பி கொண்டு சென்றனர்.
ஆனால், பண்டிகை நாட்கள் வருவதால் சந்தைக்கு ஆடுகள் வரத்து அதிகமாக காணப்பட்டது. ஆனால், ஒரே ரகம் கொண்ட ஆடுகள் சந்தைக்கு கொண்டுவரப்படுகிறது. இருந்தாலும் நேற்று ஒரே நாளில் ₹22 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது’ என கூறினர்.

The post ஆடுகள் வரத்து அதிகரிப்பால் ₹22 லட்சத்திற்கு வர்த்தகம் ஒரு ஜோடி ₹25 ஆயிரத்துக்கு விற்பனை ஒடுகத்தூர் சந்தையில் appeared first on Dinakaran.

Tags : Odukathur ,Odugathur ,Dinakaran ,
× RELATED குடும்ப பிரச்னையால் பெண்...