×

பாகல்பட்டி அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம்

ஓமலூர், நவ.18: ஓமலூர் அடுத்த பாகல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 575 மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டி கொடுக்குமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ₹1.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கூடுதலாக 6 வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் செல்வகுமரன் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர்கள் அழகிரி, சண்முகம் முன்னிலை வகித்தனர். மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, பாமக எம்எல்ஏ அருள் ஆகியோர் கலந்துகொண்டு, பூமி செய்து பணிகளை தொடங்கி வைத்தனர். கட்டுமான பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினர். விழாவில் திமுக மாவட்ட துணை செயலாளர் திருநாவுக்கரசு, ஒன்றிய கவுன்சிலர்கள் குமார், சுமதி, பாகல்பட்டி ராஜூ, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜா, பாமக மாவட்ட துணை செயலாளர் தங்கராஜ், ஒன்றிய செயலாளர் காமராஜ், துணை செயலாளர் வெங்கடேஷ், ஊராட்சி உறுப்பினர் பொன்னிகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post பாகல்பட்டி அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் appeared first on Dinakaran.

Tags : Bagalpatti Govt School ,Omalur ,Bhagalpatti Government Higher Secondary School ,Bagalpatti Government School ,Dinakaran ,
× RELATED ஓமலூர் உட்கோட்டத்தில் மது விற்ற 11 பேர் கைது