×

ஊட்டி அரசு மருத்துவமனை செல்லும் சாலை சீரமைப்பு

 

ஊட்டி, நவ.18: ஊட்டி அரசு மருத்துவமனை செல்லும் சாலை சீரமைக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகம் துவக்கியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஊட்டி நகராட்சி நிர்வாகம் உள்ளது.

குறிப்பாக, சாலைகள், குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் நகராட்சி நிர்வாகம் உள்ளது. ஆனால், இங்குள்ள சில சாலைகள் பழுதடைந்திருந்த நிலையில், இச்சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.  இதனால், பல்வேறு சாலைகளையும் தற்போது சீரமைக்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று ஊட்டி கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் இருந்து அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்லும் சாலை சீரமைக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகம் துவக்கியுள்ளது. இதற்கு பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். அதேசமயம், ஊட்டி தாசில்தார் அலுவலகம் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனையும் நகராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post ஊட்டி அரசு மருத்துவமனை செல்லும் சாலை சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Ooty Government Hospital ,Ooty ,Dinakaran ,
× RELATED கோடை சீசனுக்காக மரவியல் பூங்காவில்...