×

ம.பி. அமைச்சர் மீது கடும் நடவடிக்கை: காங். மூத்த தலைவர் திக் விஜய் சிங் வலியுறுத்தல்

போபால்: சட்டமன்ற தேர்தலுடன் பாகிஸ்தானை இணைத்து பேசிய மத்தியப்பிரதேச காவல் துறை அமைச்சரான நரோத்தம் மிஸ்ரா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் விமர்சித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 230 சட்டமன்ற தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று காலை பேசிய மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, ‘‘பாஜவை தவிர வேறு எந்த கட்சியாவது தேர்தலில் வெற்றி பெற்றால், அப்போது பாகிஸ்தானில் கொண்டாட்டங்கள் நடக்கும். நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள் பாஜவுக்கு வாக்களியுங்கள்’’ என்று கூறினார். இந்நிலையில் நரோத்தம் மிஸ்ரா கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து திக் விஜய் சிங் கூறுகையில், ‘‘இது ஆத்திரமூட்டும் அறிக்கையாகும். அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் ஆணையம் உடனடியாக அவருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்” என்றார்.

The post ம.பி. அமைச்சர் மீது கடும் நடவடிக்கை: காங். மூத்த தலைவர் திக் விஜய் சிங் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Congress ,Digvijay Singh ,Bhopal ,Madhya Pradesh ,Minister ,Narottam Mishra ,Pakistan ,M.B. ,Dinakaran ,
× RELATED காங்கிரசை விட்டு கமல்நாத் போக மாட்டார்: திக் விஜய் சிங் உறுதி