×

நடிகை மாதுரி தீட்சித் பாஜகவில் சேர்கிறாரா? மூத்த தலைவர்களுடன் ஆலோசனை


மும்பை: நடிகை மாதுரி தீட்சித் பாஜகவில் சேரவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித், அடுத்தாண்டு லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பாலிவுட் வட்டாரங்கள் கூறுகையில், ‘அடுத்தாண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியில் மாதுரி தீட்சித் போட்டியிட வாய்ப்புள்ளது. சமீப காலங்களாக அவர் மகாராஷ்டிர பாஜக தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியின் போது, மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் படேல், பாஜக மூத்த தலைவர் ஆஷிஷ் ஷெலர் ஆகியோருடன் மாதுரி தீட்சித் பங்கேற்றார். மும்பை வடமேற்கு தொகுதியானது சிவசேனா கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த தொகுதியில் மாதுரி தீட்சித் போட்டியிடலாம் அல்லது புனே தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளது. இருப்பினும், மாதுரி தீட்சித் பாஜகவில் சேர்வது குறித்து இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை’ என்று அந்த தகவல்கள் கூறுகின்றன.

The post நடிகை மாதுரி தீட்சித் பாஜகவில் சேர்கிறாரா? மூத்த தலைவர்களுடன் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Madhuri Dixit ,Bajaga ,Mumbai ,Dinakaran ,
× RELATED முன்னாள் நீதிபதி அரிபரந்தாமனுக்கு...