×

திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு.. போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது: விஜயகாந்த் கண்டனம்

சென்னை: திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய விவசாயிகளை கைது செய்ததற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சிப்காட்டுக்கு எதிராக போராடிய விவசாயிகள் கைது என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மேலும், அதில் 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதனை தேமுதிக சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைத்து விவசாயிகளையும் அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

இல்லையெனில், திருவண்ணாமலையில் தேமுதிக சார்பாக விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ஏற்கனவே, விவசாயிகளுக்கு காவிரியில் இருந்து கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காமல் ஒட்டுமொத்த விவசாய நிலங்களும் வறண்டு போய், வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கின்றனர். இந்தநிலையில் கனமழை காரணத்தால் பயிர்கள் எல்லாம் மூழ்கி, அதிலும் முற்றிலுமாக விவசாயிகள் நஷ்டத்தை அடைந்துள்ளனர். எனவே, விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு.. போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது: விஜயகாந்த் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Vijayakanth ,Chennai ,DMDK ,
× RELATED நரி தலையை வைத்து வித்தை காட்டிய...