×

சதுரகிரியில் தரிசனத்துக்கு அனுமதியில்லை: தாணிப்பாறையில் பக்தர்கள் முற்றுகை

வத்திராயிருப்பு: சதுரகிரியில் தரிசனத்துக்காக அனுமதியில்லாததால், தாணிப்பாறை வனத்துறை கேட்டில் பக்தர்கள் முற்றுகையிட்டனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இம்மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முதல் 19ம் தேதி வரை 4 நாட்களுக்கு தரிசனத்துக்கு அனுமதி என கோயில் நிர்வாகம் அறிவித்தது. ஆனால், மழை காரணமாக நேற்று தரிசனத்துக்கு அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் அறிவித்தது. நேற்று காலை பிரதோஷத்தையொட்டி தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். கோயிலுக்கு செல்ல அனுமதிக்கக் கோரி முற்றுகையிட்டனர். 5 மணி நேரம் காத்திருந்தும் அனுமதியில்லாததால் திரும்பிச் சென்றனர். 19ம் தேதி வரை மழை பெய்யும் என அறிவிப்பு இருப்பதால், சதுரகிரி கோயிலில் தரிசனத்துக்கும் அனுமதி கிடையாது என கூறப்படுகிறது. பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி கோயிலில் சுந்தரமகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. ஏற்பாடுகளை சுந்தரமகாலிங்க சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி செயல் அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் செய்திருந்தனர்….

The post சதுரகிரியில் தரிசனத்துக்கு அனுமதியில்லை: தாணிப்பாறையில் பக்தர்கள் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Chaturagiri ,Thaniparai ,Vathirayiru ,Thanipara ,Chathuragiri Sundaramakalingam ,Chaptur, Madurai district ,
× RELATED மழை தொடர்வதால் சதுரகிரி செல்ல அனுமதி ரத்து: வனத்துறை அறிவிப்பு