×

புதுக்கோட்டை பட்டியலின இளைஞர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம்: தனிப்படை அமைப்பு

புதுக்கோட்டை: ஆயிபட்டி அருகே பட்டியலின இளைஞர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆயிப்பட்டி, அண்ணா நகரைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் பிரகாஷ் பட்டாசு வாங்கி தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்ற போது மோலுடையான்பட்டி‌, நான்கு ரோட்டில் அருகே கீழ்தொண்டைமான் கிராமத்தில் ஆதிக்க சமூகத்தை சேர்ந்த சாரதி மற்றும் அவர்களின் கூட்டாளிகள் சேர்ந்து வழிமறித்தனர்.

இளைஞர் பிரகாஷை சாதிய தீண்டாமை வார்த்தையில் கொச்சையாக பேசி பீர் பாட்டிலில் 15 முறை தலையில் கொடூரமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். படுகாயமடைந்த இளைஞர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் தாக்கியவர்கள் குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது . அதனடிப்படையில் கறம்பக்குடி காவல் ஆய்வாளர் செந்தூர பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

The post புதுக்கோட்டை பட்டியலின இளைஞர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம்: தனிப்படை அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Scheduled Youth ,Ayibatti ,Pudukottai District Ayipatta ,Anna ,Scheduled Caste Youth ,Special Forces Organization ,Dinakaran ,
× RELATED பயனாளிக்கு இழப்பீடு தொகை வழங்காததால்...