×
Saravana Stores

ஆலங்குடி அருகே குடிநீர் வழங்க கோரி காலி குடத்துடன் பெண்கள் சாலை மறியல் போராட்டம்

 

புதுக்கோட்டை, ஜூலை 23: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கீழாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வாழமங்கலத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீழாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வாழமங்கலம், ஜீவநகர், புதுக்குடியிருப்பு ஆகிய பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலி கூடங்களுடன் ஆலங்குடி வடகாடு சாலையில் வெட்டன்விடுதி விளக்கு முக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வடகாடு போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பத்து நாட்களுக்குள் குடிநீர் முறையாக வழங்குவதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலில் கைவிட்டு களைந்து சென்றனர்.

The post ஆலங்குடி அருகே குடிநீர் வழங்க கோரி காலி குடத்துடன் பெண்கள் சாலை மறியல் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : blockade ,Alangudi ,Pudukottai ,Vazhamangalam ,Geezathur panchayat ,Pudukottai district ,
× RELATED வெள்ளனூர், மாத்தூர்...