×

களக்காடு அருகே கவுன்சிலர் தோட்டத்தில் வாழைகள் வெட்டி அழிப்பு

களக்காடு, நவ.17: களக்காடு அருகே கவுன்சிலர் தோட்டத்தில் வாழைகளை வெட்டி அழித்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். களக்காடு அருகே சிதம்பரபுரம் தெற்கு ரதவீதியைச் சேர்ந்தவர் செந்தில்வேல். இவர் வாழைத்தார் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி கவுரி களக்காடு நகராட்சி கவுன்சிலராக உள்ளார். இவர்களுக்கு சொந்தமான தோட்டம் சிதம்பரபுரம் ஊருக்கு அருகே உள்ள சத்திரங்காட்டில் உள்ளது. இதில் அவர்கள் வாழைகள் பயிர் செய்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவில் மர்ம நபர்கள் தோட்டத்தில் வேலிகளை உடைத்து சேதப்படுத்தி விட்டு, தோட்டத்திற்குள் நுழைந்து அங்கு பயிர் செய்யப்பட்டிருந்த 13 ஏத்தன் ரக வாழைகளை வெட்டி அழித்துள்ளனர். மறுநாள் காலையில் தோட்டத்திற்கு சென்ற கவுரி வாழைகள் அழிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வாழைகளை வெட்டி அழித்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post களக்காடு அருகே கவுன்சிலர் தோட்டத்தில் வாழைகள் வெட்டி அழிப்பு appeared first on Dinakaran.

Tags : Kalakadu ,Dinakaran ,
× RELATED களக்காடு வரதராஜபெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம் திரளான பக்தர்கள் தரிசனம்