மதுரை: மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம் தொடர்பாக புதிதாக ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன்மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. மதுரையை சேர்ந்த நாகராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மாஞ்சோலை தேயிலை தோட்டம் அமைந்திருக்கும் பகுதி களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாஞ்சோலை தேயிலை தோட்டம், பிபிடிசி என்ற தனியார் நிறுவனத்தால் குத்தகைக்கு எடுத்து செயல்பட்டு வந்தது.
தற்போது தேயிலை தோட்ட தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக விருப்ப ஓய்வு வழங்கி அந்நிறுவனம் வௌியேற்றி வருகிறது. அங்கு அதிக மரங்களையும், புல்திட்டுக்களையும் வளர்க்கவும், டான் டீ நிறுவனத்தில் ஏராளமான வெளியூர் நபர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பதிலாக அந்த பணிகளில் மாஞ்சோலை தேயிலை தோட்ட பணியாளர்களை ஈடுபடுத்துமாறு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் ஆகியோர், மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுவுடன் சேர்த்து இந்த மனுவையும் விசாரணைக்கு பட்டியலிடுமாறு கூறி விசாரணையை தள்ளி வைத்தனர்.
The post மாஞ்சோலை எஸ்டேட் விவகாரம் ஐகோர்ட் கிளையில் மேலும் ஒரு வழக்கு appeared first on Dinakaran.