×

வியாபாரியிடம் ₹8 ஆயிரம் பறித்த 2 திருநங்கைகள் கைது

சேலம், நவ. 17: கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வானூரை சேர்ந்தவர் சாஜி (30). இவர் பட்டு நூல் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த செவ்வாய்கிழமை இரவு வேலை விஷயமாக சேலம் புதிய பஸ் நிலையம் வந்தார். அப்போது அங்கிருந்த இரண்டு திருநங்கைகள் அவரிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச்சென்றனர். அப்போது அவரை மிரட்டி அவரிடமிருந்த 8 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர். இதுபற்றி சாஜி பள்ளப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், சாஜியிடம் பணத்தை பறித்தது திருநங்கைகளான ஆசிகா(21), தீனு(24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணமும் மீட்கப்பட்டது. இவர்களை மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வியாபாரியிடம் ₹8 ஆயிரம் பறித்த 2 திருநங்கைகள் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Saji ,Vanur, Kottayam District, Kerala State ,Dinakaran ,
× RELATED சேலம் அருகே மீண்டும் சிறுத்தை அட்டகாசம்