×

மஞ்சாலுமூடு

அருமனை,நவ.17: 100 நாள் வேலை திட்டத்தை முடக்கும் ஒன்றிய பா.ஜ., அரசை கண்டித்து மஞ்சாலுமூடு சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், ஏழை மக்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கு தேவையான மிகப்பெரிய ஒரு திட்டமாக 100 நாள் வேலை உறுதி திட்டம் உள்ளது. அதை நிறுத்த விட மாட்டோம் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. வட்டாரத் தலைவர் கிங்ஸ்லி சாலமோன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் ஜார்ஜ் ராபின்சன், வட்டாரத் துணைத் தலைவர் சேம் பிரகாஷ், வட்டாரச் செயலாளர்கள் பிரைட் ராஜன், ராஜா ஸ்டாலின், மாவட்ட கவுன்சிலர் அம்பிளி, வட்டார மகளிர் காங்கிரஸ் தலைவர் விமலா, மஞ்சாலுமூடு மூடு முரளி, இடைக்கோடு ராஜேந்திர பிரசாத், முழுக்கோடு சுந்தர், கடையால் மூடு சத்யராஜ், அருமனை கமலன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post மஞ்சாலுமூடு appeared first on Dinakaran.

Tags : Arumanai ,Manjalumud Junction ,Union BJP government ,Manjalumudu ,
× RELATED அருமனை அருகே மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய மருமகள் எதிர்ப்பு