×

பாதாள சாக்கடை அடைப்புகளை விரைவில் சரி செய்ய உத்தரவு

 

மதுரை, நவ.17: மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் மழையின் போது ஏற்பட்டுள்ள சாலைகள், பாதாளசாக்கடை அடைப்புகள், மழைநீர் வடிகால்கள் உள்ளிட்டவற்றை சரி செய்யும் பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வடக்கு மண்டலம் வார்டு 15ல் டிஆர்ஓ காலனி, ஆத்திகுளம், ரிசர்வ்லைன் மற்றும் பழனிசாமிநகர் 6வது தெரு மற்றும் வார்டு 35 மேலமடை, கோமதிபுரம் மெயின் ரோடு சாலை ஆகிய பகுதிகளில் சேதமடைந்த சாலைகள் மற்றும் பாதாள சாக்கடை அடைப்புகள் உள்ள இடங்களை மேயர் இந்திராணி பொன்வசந்த் பார்வையிட்டார்.

மேலும் மாநகராட்சியின் சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டியில் குப்பைகளை அதிகம் சேரவிடாமல் அகற்ற வேண்டும் எனவும் தூய்மை பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த ஆய்வின் போது மண்டலத்தலைவர் சரவண புவனேஸ்வரி, தலைமை பொறியாளர் ரூபன்சுரேஷ், கண்காணிப்பு பொறியாளர் அரசன், பிஆர்ஓ மகேஸ்வரன், உதவிநகர் நல அலுவலர் பூபதி, செயற்பொறிாளர் கலாவதி, உதவி செயற்பொறியாளர் காமராஜ், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன் உள்பட பலர் உடனிருந்தனர்.

The post பாதாள சாக்கடை அடைப்புகளை விரைவில் சரி செய்ய உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Dinakaran ,
× RELATED இளைஞர்களிடம் புத்தக வாசிப்பை...