- ஆதார்
- மதுரை
- மதுரை கிளை
- நீதிமன்றம்
- யூனியன் மாநில வழக்க
- ஆதார்
- உச்ச நீதிமன்றம்
- ஐரோப்பிய ஒன்றிய
- தின மலர்
மதுரை: மோசடியாக நீட் தேர்வு எழுதிய நபர்களின் ஆதார் விவரங்களை ஏன் வழங்கவில்லை என ஒன்றிய அரசு வழக்கறிஞரிடம் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். ஆதார் கட்டாயம் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது என ஒன்றிய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 2019-ல் நடந்த நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட தருண் மோகன் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். நீட் நுழைவு தேர்வில் மாணவன் ஒருவனுக்கு ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுத புரோக்கராக செயல்பட்டதாக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குக்கும் எனக்கும் சம்பந்தமில்லை; இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என தருண் மோகன் மனு தாக்கல் செய்துள்ளார்.
The post மோசடியாக நீட் தேர்வு எழுதிய நபர்களின் ஆதார் விவரங்களை ஏன் வழங்கவில்லை: உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி appeared first on Dinakaran.