×

திருத்துறைப்பூண்டி அருகே கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம்

 

திருத்துறைப்பூண்டி, நவ. 17: தமிழ்நாடு அரசு கால்நடை பாரமரிப்புத்துறை தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்தும் தடுப்பு திட்டத்தின் கீழ் 4 வது சுற்று கோமாரி நோய் தடுப்பு முகாம் மற்றும் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரூ உத்தரவின் பேரில் கால்நடை பாரமரிப்புத்துறை இணை இயக்குனர் ஹமீது அலி, உதவி இயக்குனர் ராமலிங்கம் வழிகாட்டுதலின்படி ராயநல்லூர் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

மருத்துவர்கள் சந்திரன், ராஜசேகர், காவியா, கீர்த்தனா, மோகனப்பிரியா, கால்நடை ஆய்வாளர்கள் முருகுபாண்டியன், சாந்தி, முருகேஷ், கால்நடை உதவியாளர்கள் சுபாஷ்சந்திரன், சதிஷ், சத்யா, புவனேஸ்வரி, நாகமணி கொண்ட மருத்துவ குழுவினர் 560 மாடு, ஆடு, கோழிகளுக்கு சிகிச்சையளித்து மருந்து மாத்திரை வழங்கி மழை காலத்தில் கால்நடைகளை எப்படி பாதுகாப்பது குறித்து ஆலோசனை வழங்கினர்.

மேலும் சிறந்த கால்நடை வளர்போர்களுக்கு 3 பரிசு வழங்கப்பட்டது. மேலும் தாது உப்பு வழங்கப்பட்டது. முகாமை கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் ராமலிங்கம் ஆய்வு செய்து, 30ம் தேதி வரை முகாம் நடைபெறுகிறது. அந்த அந்த கிராமங்களில் நடைபெறும் முகாமிகளில் கால்நடை வளர்போர் கால்நடை கொண்டு வந்து தடுப்பூசி போட்டு பயன்பெற்று கொள்ள வேண்டும் என்றார்.

The post திருத்துறைப்பூண்டி அருகே கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Vaccination Special ,Livestock Awareness ,Camp ,Thirutharapoondi ,Tamil Nadu Government Animal Care Department ,Rabies ,Vaccination ,Special Livestock Awareness ,Thiruthuraipoondi ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு