×

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர் சிகிச்சை இதயவியல் பிரிவு மருத்துவர்கள் குழு தீவிர கண்காணிப்பு

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையினரால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவரு்க க நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் சிறையில் இருந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஏற்கெனவே அவருக்கு ஆஞ்சியா பிளாஸ்ட் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு இதயம் சார்ந்த பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவருக்கு கழுத்து வலிப்பதாக கூறியதால் அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜிக்கு மேல் சிகிச்சை தேவை என மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதையடுத்து அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு செந்தில் பாலாஜிக்கு இதயவியல் பிரிவு மருத்துவர்கள் குழு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.

அவருக்கு இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து மருத்துவ பரிசோதனை முடிவுகளும் சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் சில நேரங்களில் கால் மறுத்துபோவதாகவும், கால் நரம்பு பகுதியில் அடிக்கடி வலி ஏற்படுவதாகவும் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இதையடுத்து காலில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்காக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த பரிசோதனைகளின் முடிவின் அடிப்படையிலும், ஏற்கனவே அவருக்கு ஆஞ்சியா பிளாஸ்ட் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர் சிகிச்சை இதயவியல் பிரிவு மருத்துவர்கள் குழு தீவிர கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Chennai ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக் குறைவு!