×

சேலத்தில் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்: குழாய் உடைப்பு சரி செய்யப்படுவதாக அதிகாரிகள் விளக்கம்

சேலம்: சேலத்தில் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்; குழாய் உடைப்பு சரி செய்யப்படுவதாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டரில் கடையாம்பட்டி கூட்டுக் குடிநீர் திட்ட ராட்சச குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேட்டரில் உள்ள காவிரி ஆற்றிலிருந்து ஓமலூர் மற்றும் கடையாம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் நாள்தோறும் 28 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டமானது தொப்பூர், கடையாம்பட்டி, ஓமலூர், தாரமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டமாகும். குறிப்பாக இந்த நீர் ஏற்ற நிலையமானது மேட்டரை அடுத்துள்ள தொட்டில்பட்டி என்ற இடத்தில் அமைந்து உள்ளது. மேட்டூர் காவிரி ஆற்றிலிருந்து கொண்டுவரக்கூடிய ராட்சச குழாயானது அனல்மின்நிலையம் முன்பாக இருக்கக்கூடிய குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேறி வருகிறது.

இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தகவலறிந்த கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரிகள் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று மின்மோட்டாரை நிறுத்தி அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அடிக்கடி இது போன்ற உடைப்பு ஏற்படுவதாகவும் இதனை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இன்று இரவுக்குள் மீண்டும் தண்ணீர் விநியோகம் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

The post சேலத்தில் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்: குழாய் உடைப்பு சரி செய்யப்படுவதாக அதிகாரிகள் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Dinakaran ,
× RELATED சேலம் பள்ளப்பட்டியில் உள்ள ஏரி பூங்காவில் தீ ஏற்பட்டதால் பரபரப்பு