×

எஸ்எம்ஏ நேஷனல் பள்ளியில் தேசிய குழந்தைகள் தின விழா

நெல்லை, நவ. 16: அடைக்கலப்பட்டணம் எஸ்எம்ஏ நேஷனல் பப்ளிக் பள்ளியில் நடந்த தேசிய குழந்தைகள் தின விழாவில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். பாவூர்சத்திரம் அருகேயுள்ள அடைக்கலப்பட்டணம் எஸ்எம்ஏ நேஷனல் பப்ளிக் பள்ளியில் தேசிய குழந்தைகள் தினம் மற்றும் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு 135வது பிறந்த நாள் விழா பள்ளியின் முதல்வர் டாக்டர் மகேஸ்வரி ராஜசேகரன் தலைமையில் நடந்தது. பள்ளியின் அகடாமிக் இயக்குனர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். விழாவில் மழலையர் வகுப்பு மாணவர்கள் நேருவைப் போல வேடமணிந்து நேரு பற்றிய பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர். முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் தங்களின் திறன் வெளிப்படும் விதமாக கதைக் கூறல், பாடல் பாடுதல், படம் வரைதல், வினாடி வினா, வாசித்தல் திறன், பேச்சுப் போட்டி ஆகிய போட்டிகளில் பங்கேற்றனர். மாணவர்கள் சுவரொட்டி தயாரித்தல், கழிவுகளிலிருந்து கலை, பேச்சுப் போட்டி மற்றும் கவிதைப் போடடிகளில் பங்கேற்று மகிழ்ந்தனர். பள்ளியின் முதல்வர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் துணை முதல்வர் சரளா ராமச்சந்திரன், உதவி துணை முதல்வர் பாகீரதி, ஒருங்கிணைப்பாளர்கள் கலைச்செல்வி, ரம்யாதேவி மற்றும் ஆசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

The post எஸ்எம்ஏ நேஷனல் பள்ளியில் தேசிய குழந்தைகள் தின விழா appeared first on Dinakaran.

Tags : National Children's Day ,SMA National School ,Nellie ,Adhikalapatnam ,SMA National Public School ,Dinakaran ,
× RELATED மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு.. மகளிர் கல்லூரி மாணவிகள் அசத்தல்