×

பாலியல் தொழிலுக்கு சிறுமியை கட்டாயப்படுத்திய பெண் மீது குண்டாஸ்

திருச்சி: திருச்சி பாலக்கரை கீழபுதூரில் வாடகைக்கு வீடு எடுத்து, சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தி வருவதாக பெறப்பட்ட புகாரின் போில் அபிநிஷா, ரவிக்குமார், அசோக், பானு மேலும் இருவர் உட்பட 6 நபா்கள் சோ்ந்து, சிறுமிகளை வற்புறுத்தியும், மிரட்டியும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றங்களுக்காக கடந்த அக்10ம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தொடா் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அளித்த அறிக்கையினை பாிசீலனை செய்த, மாநகர போலீஸ் கமிஷ்னர் காமினி குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதனை தொடா்ந்து திருச்சி மகளிர் தனிச்சிறையில் உள்ள பானு மீதான குண்டர் தடுப்பு ஆணை சார்பு செய்யப்பட்டு, குண்டா் தடுப்பு காவலின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

The post பாலியல் தொழிலுக்கு சிறுமியை கட்டாயப்படுத்திய பெண் மீது குண்டாஸ் appeared first on Dinakaran.

Tags : Kundas ,Trichy ,Trichy Balakar ,Geezhaputur ,
× RELATED மின் கசிவால் அசைவ உணவகத்தில் தீ விபத்து