×

ஓபிசி, தலித், பழங்குடிகள் தங்கள் பலத்தை அறிந்தால் மாற்றங்கள் உருவாகும்: ராகுல் பிரசாரம்

பெமத்தரா: பிற்படுத்தப்பட்டோர்,தலித், பழங்குடியினர் தங்களது உண்மையான பலத்தை அறிந்தால் நாட்டில் மிக பெரிய மாற்றம் உருவாகும் என ராகுல் காந்தி கூறினார். சட்டீஸ்கர் சட்டபேரவைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இதையொட்டி சட்டீஸ்கரில் உள்ள பெமத்தராவில் நேற்று நடந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி,‘‘ சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் விவகாரத்தில் பிரதமர் மோடி தனது நிலை பற்றி தெளிவாக எதுவும் கூறவில்லை. ரூ.12,000 கோடி மதிப்பிலான விமானத்தில் பறந்து செல்லும் அவர், தினமும் புது புது ஆடைகளை அணிகிறார். பிற்படுத்தப்பட்டவர் என்று கூறி கொண்டும் அவர்கள் நலனுக்காக பாடுபடுவேன் என பிரசாரம் செய்து பிரதமர் பதவிக்கு தேர்வாகியவர் மோடி. பிற்படுத்தப்பட்டவர்களுக்கான உரிமை வழங்குவதற்கான நேரம் வந்துள்ள நிலையில் பிற்படுத்தப்பட்ட சாதிகள் எதுவும் இல்லை, ஏழைகள் மட்டும் தான் இருக்கின்றனர் என்று பிரதமர் கூறுகிறார். மோடி சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துகிறாரோ இல்லையோ, சட்டீஸ்கரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத்தால் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். டெல்லியில் காங்கிரஸ் அரசு அமைந்தால், சாதி கணக்கெடுப்புக்காக முதல் கையெழுத்து போடப்படும். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு.நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், தலித்,பழங்குடியினர் தங்களுடைய உண்மையான மக்கள் தொகை பற்றி அறிந்து கொண்டால் நாட்டில் பெரிய மாற்றம் ஏற்படும். சுதந்திரத்துக்கு பின்னர் எடுக்கப்பட்ட புரட்சிகரமான முடிவாகும் இது’’ என்றார்.

The post ஓபிசி, தலித், பழங்குடிகள் தங்கள் பலத்தை அறிந்தால் மாற்றங்கள் உருவாகும்: ராகுல் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : OBC ,Rahul Prasaram Bemathara ,Rahul Gandhi ,Rahul Prasaram ,
× RELATED பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர்...